Posts

Showing posts from September, 2020

Saint Sophia

Image

புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்

Image
புனித லூர்து மாதாவுக்கு ஜெபம் அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து , தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும் . உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும் . புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம் . உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும் தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும் . மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே , தேவரீர் எங்கள் தாயாராகையால் , எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும் ஆமென் லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் புனித லூர்து மாதாவுக்கு நவநாள் (உத்தம...

புனித அருளானந்தரை நோக்கி செபம்

Image
*புனித அருளானந்தரை நோக்கி செபம்*  கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனை...

புனித ஜார்ஜியாரை நோக்கி செபம்

*புனித ஜார்ஜியாரை நோக்கி செபம்*  அனைத்திற்கும் ஆதாரமாக இறைவனுக்கு மிகவும் விருப்பமுள்ளவருமாய், கிறிஸ்தவ நெறிகளுக்கு காவலருமாய், எங்களுக்கு துணையும் பாதுகாவலருமாய் எங்கள் நடுவே எழுந்தருளி இருக்கும் புனித ஜார்ஜியாரே! நீர் கடவுள் மேல் உண்மையான நம்பிக்கையும், அன்பும் கொண்டதால் அவர் உம்மேல் அன்பும் கருணையும் இரக்கமும் காட்டினாரே. மனிதரை கொன்று தின்று வந்த நாகப்பறவை வடிவில் உள்ள அசுத்த ஆவியை வெண் குதிரையின் மேல் அமர்ந்து ஈட்டியால் குத்திக் கொன்று, வெற்றிமாலை சூடினீரே. தியோக்கிலேசியனின் கட்டளைகளுக்கு அஞ்சாமல் கிறிஸ்தவத்தை எல்லா மக்களுக்கும் அறிவித்தீரே. மன்னனின் கொடிய கட்டளைகளை விசுவாசம் என்னும் சம்மட்டியால் அடித்து நொறுக்கி மன்னனால் மூன்று முறை கொல்லப்பட்டு, கடவுளின் அருளால் மும்முறையும் உயிர்பெறவும் வரம் பெற்றீரே! நீர் விண்ணரசு போய் சேரும் காலம் நெருங்கி வரவே தியோக்கிலேசியன் உமது தலையை வெட்டவும், உமது ஆன்மாவை வானதூதர்கள் புடைசூழ திருக்கரங்களில் ஏந்தி கடவுளின் பாதத்தில் சமர்ப்பிக்கவும், விண்ணரசில் வேதசாட்சி முடிசூட்டப்படவும், அன்று முதல் இன்றுவரை உமது கல்லறையைத் தேடி வருபவர்கள் புதுமைகள்...

இரவு ஜெபம்

🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙          *🙏🏻† இரவு ஜெபம் †🙏🏻* 🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙 எல்லாம் வல்ல இறைவா! இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைகளுக்கும் விரோதமாயிருப்பதால், மனம் நொந்து வருந்துகிறேன். எங்களை  மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன்.  ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும். நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம். நாள்தோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும், இருப்பீராக! நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் எங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லவற்றையே சொல்லவும், செய்யவும், எங்களை உறுதிப்படுத்துவார்களாக!  இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். என்னை இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால்  நிர...

புனித தேவசகாயம் பிள்ளையே !எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Image
புனித தேவசகாயம் பிள்ளையே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தமிழகத்தின் தென் கோடியில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு... இயேசுவை அறிவிக்கப்படாத காலத்தில், இயேசுவை அதிகமாக அறிந்து, அன்பு செய்து ,கிறிஸ்துவுக்காக வேதசாட்சியாக மரித்த புனித தேவசகாயம் பிள்ளையே... நாங்கள் உம்மை போல் வேதசாட்சியாக மரிக்காவிட்டாலும் ,நல்ல கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்து மரிக்க எங்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசும்.  கிறிஸ்துவ வாழ்க்கை வாழ எங்களுக்கு தடையாக இருக்கும் எங்கள் பாவங்களை மன்னித்து...இந்த துன்பம் கொரனாவை எங்களிடம் இருந்து அகற்றி ஒழித்து விட்டு. ஆமென்

பரிசுத்த ஆவி பிரார்த்தனை

*பரிசுத்த ஆவி பிரார்த்தனை* பரிசுத்த ஆவியே எழுந்தருள்வீர். எங்கள் இருதயங்களை விசுவாசத்தால் நிரப்பிடுவீர். அவற்றில் அன்பின் அக்கினியை தூண்டியருளும். மு : உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும், ப : அதனால் உலகினை புதுப்பிப்பீர். *ஜெபிப்போமாக* ஆண்டவரே, பரிசுத்த ஆவியின் ஒளியினால் விசுவாசிகளின் இருதயங்களுக்கு அறிவூட்டுகின்றீர். அந்த ஆவியினால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். ___________________

🌹 *கிருபைதயாபத்து மந்திரம்*

🌿🌿🌿🌿🌺🌺🌺🌿🌿🌿🌿 🌹 *கிருபைதயாபத்து மந்திரம்* கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசு நாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியே! இயேசுகிறிஸ்த்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!  *ஆமென்*🌹 🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌿🌿🌿🌿

காணாமல் போனவற்றைக் கண்டெடுக்க புனித அந்தோனியாரிடம் ஜெபம்

*காணாமல் போனவற்றைக் கண்டெடுக்க புனித அந்தோனியாரிடம் ஜெபம்* ஓ புனித அந்தோனியாரே கடவுளின் அருள் உம்மை எங்கள் தேவைகளில்  இறைவனிடம் பரிந்து பேசுபவராகவும் களவு போன அல்லது காணாமல் போன  பொருட்களைக் காட்டிக் கொடுக்கிறவராக செய்தது. இன்று குழந்தைக்குரிய  அன்புடனும் பற்றுதலுடனும் உம்மை அண்டி வருகிறேன். தவறுகிறவர்களுக்கு  ஆலோசனை நீரே! துன்புறுகிறவருக்கு ஆறுதல் நீரே நோயாளிகளுக்குக் குணம் நீரே,  பாவிகளுக்கு அடைக்கலம் நீரே, கடவுளின் எண்ணற்ற மக்களுக்கு காணாமல் போன  பொருட்களையும் ஞான வாழ்வில் தவறிய தங்களையும் குறிப்பாக விசுவாசம், நம்பிக்கை,  தேவ சிநேகம் முதலானவற்றையும் கண்டுபிடிக்கச் செய்துள்ளீர். உறுதியான நம்பிக்கையுடன்  வருகின்ற எனக்கு இத்தருணத்தில் உதவி செய்யும். இழந்து போன (பொருளை)  இறைவனுக்குச் சித்தமானால் நீர் பெற்றுத் தருவீர் என்று திட மனதுடன் வேண்டுகிறேன் ஆமென். காணாமல் போன பொருளை கண்டடைவதற்கு ஜெபம் ஓ மகா உன்னத மகத்துவம் பொருந்திய அர்ச்சிஸ்ட அந்தோனியாரே! சகல நன்மைகளும் நிறையப்பெற்ற அப்போஸ்தலரே! தேவரீர் (காணாமற்போன பொருளைத் திரும்பக் கண்டடையத் செய்கிற)...

*தூய சூசையப்பரிடம் மன்றாட்டு*

🍀🍀🍀🍀🌺🌺🌺🍀🍀🍀🍀 *தூய சூசையப்பரிடம் மன்றாட்டு* புனித சூசையப்பரே! உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமைமிக்கது. இறைவனின் சந்நதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உமது அடைக்கலத்தில் வைக்கிறேன். உமது வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுதாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும் ஆராதனையும் செலுத்தக்கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதாகாலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் பொருட்டு உம் மார்போடு அவரை அணைத்து முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்கு பெற்றுத்தந்தருளும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். *ஆமென்.* 🍀🍀🍀🍀🌺🌺🌺🍀🍀🍀🍀