இரவு ஜெபம்
🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙
*🙏🏻† இரவு ஜெபம் †🙏🏻*
🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙
எல்லாம் வல்ல இறைவா!
இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைகளுக்கும் விரோதமாயிருப்பதால், மனம் நொந்து வருந்துகிறேன். எங்களை மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன்.
ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும். நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம். நாள்தோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும், இருப்பீராக!
நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் எங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லவற்றையே சொல்லவும், செய்யவும், எங்களை உறுதிப்படுத்துவார்களாக!
இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். என்னை இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் நிரப்பியருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக்கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும்.
என் நல்ல காவல் தூதரே!
என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
*🙏🏻ஆமென்! †🙏🏻
Comments
Post a Comment