காணாமல் போனவற்றைக் கண்டெடுக்க புனித அந்தோனியாரிடம் ஜெபம்
*காணாமல் போனவற்றைக் கண்டெடுக்க புனித அந்தோனியாரிடம் ஜெபம்*
ஓ புனித அந்தோனியாரே கடவுளின் அருள் உம்மை எங்கள் தேவைகளில்
இறைவனிடம் பரிந்து பேசுபவராகவும் களவு போன அல்லது காணாமல் போன
பொருட்களைக் காட்டிக் கொடுக்கிறவராக செய்தது. இன்று குழந்தைக்குரிய
அன்புடனும் பற்றுதலுடனும் உம்மை அண்டி வருகிறேன். தவறுகிறவர்களுக்கு
ஆலோசனை நீரே! துன்புறுகிறவருக்கு ஆறுதல் நீரே நோயாளிகளுக்குக் குணம் நீரே,
பாவிகளுக்கு அடைக்கலம் நீரே, கடவுளின் எண்ணற்ற மக்களுக்கு காணாமல் போன
பொருட்களையும் ஞான வாழ்வில் தவறிய தங்களையும் குறிப்பாக விசுவாசம், நம்பிக்கை,
தேவ சிநேகம் முதலானவற்றையும் கண்டுபிடிக்கச் செய்துள்ளீர். உறுதியான நம்பிக்கையுடன்
வருகின்ற எனக்கு இத்தருணத்தில் உதவி செய்யும். இழந்து போன (பொருளை)
இறைவனுக்குச் சித்தமானால் நீர் பெற்றுத் தருவீர் என்று திட மனதுடன் வேண்டுகிறேன் ஆமென்.
காணாமல் போன பொருளை கண்டடைவதற்கு ஜெபம்
ஓ மகா உன்னத மகத்துவம் பொருந்திய அர்ச்சிஸ்ட அந்தோனியாரே! சகல நன்மைகளும் நிறையப்பெற்ற அப்போஸ்தலரே! தேவரீர் (காணாமற்போன பொருளைத் திரும்பக் கண்டடையத் செய்கிற) புதுமைகளைச் செய்யும் வரத்தை ஆண்டவரிடமாக அடைந்திருக்கிறீரே (காணாமல் போன பொருளைத் திரும்பக் கண்டடையும்படி) உமது ஆதரவைத் தேடி வந்திருக்கிற அடியேனுக்கு இத்தருணத்தில் உதவி புரிந்தருளும். தேவரீரைக் கொண்டு இத்தகைய மேலான அதிசயங்களைச் செய்விக்கிற ஆண்டவரை நான் மேன்மேலும் மகிமைப்படுத்திக் கொண்டாடி வருகிறேன். -ஆமென்.
Comments
Post a Comment