பரிசுத்த ஆவி பிரார்த்தனை
*பரிசுத்த ஆவி பிரார்த்தனை*
பரிசுத்த ஆவியே எழுந்தருள்வீர். எங்கள் இருதயங்களை விசுவாசத்தால் நிரப்பிடுவீர். அவற்றில் அன்பின் அக்கினியை தூண்டியருளும்.
மு : உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும்,
ப : அதனால் உலகினை புதுப்பிப்பீர்.
*ஜெபிப்போமாக*
ஆண்டவரே, பரிசுத்த ஆவியின் ஒளியினால் விசுவாசிகளின் இருதயங்களுக்கு அறிவூட்டுகின்றீர். அந்த ஆவியினால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
___________________
Comments
Post a Comment