Posts

ஆண்டவர் இயேசுவின் திரு இரத்த செபமாலை

🌿ஆண்டவர் இயேசுவின் திரு இரத்த செபமாலை  _✝️நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்._ இதோ ! ஆண்டவரின் சிலுவை.   சத்துருகள் அகன்றுப் போகட்டும். ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும்.   யூதாகுலத்தின் சிங்கமும், தாவீதின் குலக் கொழுந்துமானவர் ஜெயம் கொண்டார். அல்லேலூயா (3) எல்லோரும்: ஆண்டவர் இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும் (2 முறை) • ஒருவர் : ஆண்டவர் இயேசுவின் திருசிரசிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே!  • எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும் (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே .  .  .  .  .  .  .  .  ) (5 முறை சொல்லவும்)  • ஒருவர் : ஆண்டவர் இயேசுவின் திருத்தோளிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே(5)  • எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.   (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே ...

புனித சூசையப்பரை நோக்கி ஜெபம்.!

Image
புனித சூசையப்பரை நோக்கி ஜெபம்.!                  புனித சூசையப்பரே! உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது,‌ வல்லமைமிக்கது, இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும், உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.  உம் வல்லமைமிக்க பரிந்நனதுரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்கு தேவையான எல்லா உடல் உள்ள ஆன்ம நலன்களையும் பெற்று தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலை போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கவில்லை.  இறைவன் உம் மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும் நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்கு தரும்படி கூறும். மரித்து விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். ஆமென். *(தொடர்ந்து...

Saint Sophia

Image

புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்

Image
புனித லூர்து மாதாவுக்கு ஜெபம் அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து , தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும் . உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும் . புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம் . உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும் தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும் . மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே , தேவரீர் எங்கள் தாயாராகையால் , எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும் ஆமென் லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் புனித லூர்து மாதாவுக்கு நவநாள் (உத்தம...

புனித அருளானந்தரை நோக்கி செபம்

Image
*புனித அருளானந்தரை நோக்கி செபம்*  கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனை...

புனித ஜார்ஜியாரை நோக்கி செபம்

*புனித ஜார்ஜியாரை நோக்கி செபம்*  அனைத்திற்கும் ஆதாரமாக இறைவனுக்கு மிகவும் விருப்பமுள்ளவருமாய், கிறிஸ்தவ நெறிகளுக்கு காவலருமாய், எங்களுக்கு துணையும் பாதுகாவலருமாய் எங்கள் நடுவே எழுந்தருளி இருக்கும் புனித ஜார்ஜியாரே! நீர் கடவுள் மேல் உண்மையான நம்பிக்கையும், அன்பும் கொண்டதால் அவர் உம்மேல் அன்பும் கருணையும் இரக்கமும் காட்டினாரே. மனிதரை கொன்று தின்று வந்த நாகப்பறவை வடிவில் உள்ள அசுத்த ஆவியை வெண் குதிரையின் மேல் அமர்ந்து ஈட்டியால் குத்திக் கொன்று, வெற்றிமாலை சூடினீரே. தியோக்கிலேசியனின் கட்டளைகளுக்கு அஞ்சாமல் கிறிஸ்தவத்தை எல்லா மக்களுக்கும் அறிவித்தீரே. மன்னனின் கொடிய கட்டளைகளை விசுவாசம் என்னும் சம்மட்டியால் அடித்து நொறுக்கி மன்னனால் மூன்று முறை கொல்லப்பட்டு, கடவுளின் அருளால் மும்முறையும் உயிர்பெறவும் வரம் பெற்றீரே! நீர் விண்ணரசு போய் சேரும் காலம் நெருங்கி வரவே தியோக்கிலேசியன் உமது தலையை வெட்டவும், உமது ஆன்மாவை வானதூதர்கள் புடைசூழ திருக்கரங்களில் ஏந்தி கடவுளின் பாதத்தில் சமர்ப்பிக்கவும், விண்ணரசில் வேதசாட்சி முடிசூட்டப்படவும், அன்று முதல் இன்றுவரை உமது கல்லறையைத் தேடி வருபவர்கள் புதுமைகள்...