Posts
Showing posts from May, 2023
ஆண்டவர் இயேசுவின் திரு இரத்த செபமாலை
- Get link
- X
- Other Apps
🌿ஆண்டவர் இயேசுவின் திரு இரத்த செபமாலை _✝️நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்._ இதோ ! ஆண்டவரின் சிலுவை. சத்துருகள் அகன்றுப் போகட்டும். ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும். யூதாகுலத்தின் சிங்கமும், தாவீதின் குலக் கொழுந்துமானவர் ஜெயம் கொண்டார். அல்லேலூயா (3) எல்லோரும்: ஆண்டவர் இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும் (2 முறை) • ஒருவர் : ஆண்டவர் இயேசுவின் திருசிரசிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே! • எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும் (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே . . . . . . . . ) (5 முறை சொல்லவும்) • ஒருவர் : ஆண்டவர் இயேசுவின் திருத்தோளிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே(5) • எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே ...