Posts

Showing posts from December, 2021

புனித சூசையப்பரை நோக்கி ஜெபம்.!

Image
புனித சூசையப்பரை நோக்கி ஜெபம்.!                  புனித சூசையப்பரே! உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது,‌ வல்லமைமிக்கது, இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும், உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.  உம் வல்லமைமிக்க பரிந்நனதுரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்கு தேவையான எல்லா உடல் உள்ள ஆன்ம நலன்களையும் பெற்று தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலை போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கவில்லை.  இறைவன் உம் மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும் நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்கு தரும்படி கூறும். மரித்து விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். ஆமென். *(தொடர்ந்து...